Wednesday, September 22, 2010

இந்த நாட்டை எது காப்பாற்றும்?

-------எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் 

திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்றுசொல்லிவிட்டு, “ அந்தப் பணத்தை எனக்குக் கொடு” என்று வாங்கிக்கொள்ளும் சீர் திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தன் பதவியில் இருக்கும்போது காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன்அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால்,” ஐயோ! அநியாயம்!”என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தராசைத் தலைகீழாக நிறுக்கும் வணிகர்களை, வியாபாரிகளைப்பார்த்திருக்கிறேன்.

பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறுமாதத்திற்குப் பிறகு”நகை வட்டியில் மூழ்கி விட்டது” என்று சொல்லும்அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியில் கலப்பதற்கென்று தனிக்'கல் தொழிற்சாலை'யே நடத்தும் அரிசிவியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பைவரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆட்டுக் கறியில் மாட்டுக் கறியையும் கலந்து பிரியாணி போடும் அசைவஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குகோழி வாங்கி அதை எண்பது ரூபய்க்கு விற்கின்ற அநியாயத்தைக்கண்டிருக்கிறேன்.

நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும்கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.
அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்றுவிற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோவில்களைக் கண்டேனோஅவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவிமதம், ஒரே துணைக்கருவி இறைவன். அந்த மதமும், இறைவனும்தான் மனிதர்களை மீட்கமுடியும்.
தெய்வபக்தி வளர வளர,”நமக்கேன் வம்பு; ஆண்டவன் நம்மைச்சபித்து விடுவான். ஆண்டவன் நம்மைத்தண்டித்து விடுவான்” என்றெல்லாம் பயந்து பொய் சொல்லாமலே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு

Thursday, August 26, 2010

கண்ணதாசன் மாஸ்டர் பீஸ் கவிதை

Thursday, July 22, 2010

மனதைத் தொட்ட வரிகள் ....

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்
- ஸ்காட்லாந்து பொன்மொழி

2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
- கவியரசு கண்ணதாசன்

3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

4. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்
- நெப்போலியன்

5. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
- ஆஸ்கார் ஒயில்ட்

6. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்
- பெர்னாட்ஷா

7. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
- ஹாபர்ட்.

8. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
- பாலஸ்தீனப் பழமொழி

9. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
- ப்ரெட்ரிக் நீட்சே

10. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
- வின்ஸ்டர் லூயிஸ்

இந்த பத்துப் பொன்மொழிகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது?

எழுதுங்கள்!

Monday, July 19, 2010

இந்திய நாணய குறியீடு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ

புதிய இந்திய நாணய குறியீடை உங்கள் கணினியில் நிறுவ 
Ruppee Foradian எனும் Font யை http://blog.foradian.com/  எனும் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.

இந்த Font யை உங்கள் கணினியில் C:\Windows\Fonts என்ற போல்டரில் காப்பி செய்ய வேண்டும். நீங்கள் விண்டோஸ் 7 உபயோகிபவர்கள் என்றால் அந்த Font யை டபுள் கிளிக் செய்து Install எனும் பட்டன் யை கிளிக்செய்யவும். 

பின்னர் Word யோ அல்லது உங்களுக்கு பிடித்த மான Text எடிட்டர் யை Open செய்து அதில் Ruppee Foradian எனும் Font யை தேர்வு செய்து 
உங்கள் Keyboard ல் tilde (~)  பட்டன் யை அழுத்தினால் புதிய இந்திய நாணய குறியீடு பதிவு ஆகும். 

இதன் மூலம் உங்கள் Document ல் அல்லது உங்கள் வலை பக்கத்தில் புதிய இந்திய நாணய குரீட்டினை Support செய்ய முடியும். 

Friday, July 16, 2010

புதிய இந்திய ரூபாய் குறியேடு

இந்திய அரசு புதிய ரூபாய் குறீடு வெளியிட திடமிடுள்ளது ..
இதற்கான குறியீட்டை IIT - Bombay மாணவர் உதய குமார் என்பவர் டிசைன் செய்து உள்ளார்.

இந்த குறியீடு அமெரிக்க டாலர் ( $ ) குறியீடு , மற்றும் ஐரோபிய Euro குறியீடுக்கு இணையாக உலக முழுவதும் இந்திய ரூபாய் யை 
குறிக்க பயன் படுத்த படும். இந்த புதிய இந்திய குறியேடு ஹிந்தி எழுத்து 'R' ய் குறிக்கிறது மற்றும் மேல உள்ள மூன்று கோடுகள் இந்திய கொடி யை குறிபதாக சொல்ல படுகிறது. 
இந்த குறீடு ஆனது உலக அளவில் இந்த ரூபாய் மதிப்பை உயர்த்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள் .

Monday, July 12, 2010

டிவிட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சகம்!

ட்விட்டர் ன் மகத்துவத்தை புரிந்து கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் இதில் இணைத்துள்ளது. இந்திய விலே முதல் முறையாக சமூக வலை தளத்தில்
இணைத்துள்ள ஒரே துறை என்ற பெருமையை இந்திய வெளியுறவு அமைச்சகம் பெறுகிறது .தமது துறை சார்ந்த தகவல்களையும் கருத்துகளையும் டிவிட்டரில் இனி தொடர்ந்து வெளியிடும் என்று தெரிகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த டிவிட்டர் கணக்கு, கடந்த ஜூலை 8 அன்று உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின் அமைச்சகம் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது என்பது புதிதல்ல. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இது நடைமுறையிலேயே இருக்கிறது.

எனினும், இந்தியாவின் முதல் முறையாக இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது, வெளியுறவு அமைச்சகம். இன்று வரை சுமார் 1000 க்கும் மேலோர் இந்திய வெளியுறவு அமைச்சக தை பின் தொடருகிறார்கள்.   

இந்திய வெளியுறவு அமைச்சக தை ட்விட்டர் ல் பின் தொடர 
 https://twitter.com/indiandiplomacy என்ற தளத்தை பார்கவும்.

Sunday, July 11, 2010

உங்கள் ப்ளாக் மூலம் பணம் சம்பாதிக மற்றும் ஓர் வழி

நீங்கள் உங்கள் ப்ளாக் மூலம் இன்னும் அதிகமாக பணம் பெறலாம். ஏற்கனவே பலர் Google AdSense எனும் சேவை பயன் படுத்தி தங்கள் ப்ளாக் மூலம் சம்பதிகின்றனர் .
 தங்களது ப்ளாக் களில் கூகிள் தனது  விளம்பரத்தை வைத்து , அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும்  ஒவ் ஒரு கிளிக் கும் கூகிள் உங்களுக்கு பணம் தரும் .
இது அனைவரும் அறிந்ததே . தற்போது கூகிள் amazon நிறுவனத்துடன் சேர்ந்து Amazon Associates விளம்பரங்களையும் தங்கள் ப்ளாக் களில் வெளியிடும் .
இது Google AdSense போலவே மற்றும் ஒரு சேவை. இதில் Amazon நிறுவன விளம்பரம் மட்டுமே இடம் பெரும். பார்க்க இடது புறம் உள்ள அமேசான் அச்சொசியாட்ஸ் விளம்பரங்களை . இந்த விளம்பரங்களை நீங்கள் ப்ளாக் களை கம்போஸ் செய்யும் பொது உங்களுக்கு தேவையான விளம்பரகளை Amazon Associates Widget மூலம் இட முடியும். மேலும் இதில் உங்களுக்கு தேவையான Category யை தேர்வு செய்து அந்த விளம்பரகளை உங்கள் வலை பதிவில் இட முடியும். ப்ளாக் களை Compose செய்யும் போது Amazon Associates Widget ல் Add Link, Add Image , Add Link + Image பட்டன் கள் மூலம் அந்த அந்த விளம்பரங்களை உங்கள் ப்ளாக் களில் இட முடியும்.  


இதற்க்கு நீங்கள் கீழ் வரும் seetings களை உங்கள் ப்ளோகில் செய்ய வேண்டும். உங்கள் ப்ளாக் அக்கௌன்ட் ல் லாகின் செய்து Monatize எனும் Tab ய் கிளிக் செய்து அதில் உள்ள Amazon associates எனும் லிங்க் யை கிளிக் செய்து அதில் உள்ள வழி முறையை
 பின் பற்றவும்.  பார்க்க படம் .
Amazon Associates விளம்பரங்களை  உங்கள் ப்ளாக் களில் பயன்படுத்தி இன்னும் அதிகமாக பணம் பெறுங்கள் .

Saturday, July 10, 2010

உங்கள் வருமான வரியினை ஆன்லைனில் தாக்கல் செய்யுங்கள்

மாத சம்பளம் வாங்குவோர் , மற்றும் பிசினஸ் செய்பவரும் தங்களது வருமான வரியினை ஜூலை 31 க்குள் வருமான வரி அலுவலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்ய விடில் நீங்கள் வருமான வரி செலுத்தி இருந்தாலும் , வரி செலுத்த வில்லை 
என்றே கணக்கில் கொள்ள படும்.

இதற்க்கு என்று சில Agent களும் , சில ஆடிடர் களும் இருக்கிறாகள். இவர்கள் உங்கள் வருமான வரியினை கணக்கிட்டு ITR எனப்படும் படிவங்களை பூர்த்தி செய்து வருமான வரி அலுவலகத்தில் 
சமர்ப்பித்து விடு அதற்குரிய Acknowledgement பெற்று தந்து விடுவார்கள். இதற்க்கு ரூபாய் 100 முதல் 500 வரை செலவிட வேண்டும். 
இதை நீங்கள் இலவசமாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு நீங்கள் https://incometaxindiaefiling.gov.in/portal/index.do என்ற பக்கதில் சென்று அதற்குரிய வழி முறைகளை பின் பற்றவேண்டும். 

இன்சாட் 4-பி தகவல் சேவை பாதிப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன் என்னோட சன் DTH ல் எந்த ஒரு சேனலும் தெரியவில்லை .சரி மழை பெய்ததன் காரணமாக கூட இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன் .மீண்டும் மழை நின்று வெயில் வந்தவுடன் , எனது TV ஐ போட்டு மீண்டும் முயற்சித்தேன் .No Signal என்றே வந்தது . எனது நண்பருக்கு போன் செய்து கேட்டேன் . அவரும் அதே பதிலே சொன்னாரு ..
சரி என்று இன்டர்நெட் ல் தேடினேன் . அப்போது தான் தெரிந்தது இது 
இன்சாட்-4பி’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் மின்சாரம் விநியோகிக்கும் சோலார் கருவியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பல தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைக்காக இன்சாட்-4பி என்ற செயற்கைக்கோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏரியன்5 என்ற ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் செயல்பாட்டு காலம் 12 ஆண்டுகளாகும்.
பூமியை சுற்றிவரும் இந்த செயற்கைக்கோள் 3 டன்கள் எடை கொண்டது. இதில் 24 கம்யூனிகேஷன் டிரான்ஸ்போன்டர்ஸ்கள் (12 கே.யூ-பேன்டு, 12 சி-பேன்டு ) உள்ளன. இந்நிலையில் இந்த செயற்கைக்கோள் செயல்படத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியைக்கொண்டு தயாரித்து வழங்கும் 2 சோலார் கலத் தகட்டுகளில் ஒன்றில் கடந்த 7-ம் தேதி கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து அந்த செயற்கைக்கோளில் உள்ள டிரான்ஸ்பாண்டர் கெப்பாசிட்டி கருவிகளில் 50 சதவீத இயக்கம் நின்றுபோயுள்ளது. இந்தக் காரணத்தால் நாட்டில் சில தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டு நின்று போயுள்ளது. அதேபோல தொலைபேசி சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோளாறை விரைவில் சரி செய்து தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் தொலைபேசி சேவைகளை மீண்டும் சரிவரச் செய்ய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
இன்சாட் 4-பி தகவல் சேவை யின் மூலம் ஒளி பரப்பப்படும் சேனல் விபரம் இங்கே. 

Friday, July 09, 2010

தேவனின் புத்தகங்கள் ...





தேவனின் புத்தகங்கள் .காலத்தால் அழியாதது .டைம் கிடச்சா வாங்கி படுச்சு பாருங்க .எல்லாமே அந்த காலத்து பொகிஷங்கள்.இவை என்றுமே காலத்தால் அழியாதது .தேவன் நின் இயற் பெயர் R. மகாதேவன். கல்கி, ஆனந்த விகடனில் ஆசிரியராக 23 ஆண்டுகள் பணி புரிந்தார். இவர் 1957 ல் தனது 44 வயதில் காலமானார்.

துபறியும் சாம்பு சிறு சிறு கதைகள் அடங்கிய ஒரு முழு நகைச்சுவை தொகுப்பு. அவருடைய நகைச்சுவை கதைகளில் மிகவும் பிரபலமானவை 'கோமதி இன் காதலன் ' , 'கல்யாணி' , 'மிஸ் ஜானகி' போன்றவை. ' துப்பறியும் சாம்பு வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள் .

உண்மையில் தமிழில் எழுத பட்ட நகைச்சுவை இலக்கியங்கள் அனைத்துமே சாம்புவுக்கு பின்னால் தான் என்று சொல்ல வேண்டும். 
இதில் துபறியும் சாம்பு கதை 10 வருடங்களுக்கு முன்பு Jaya TV யில் நாடகமாக வந்தது.Y.G. மகேந்திரன் சாம்பு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவை அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு ஆகும்.







ட்விட்டருக்கு ஆபத்தா ?


உலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

இதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், "எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra). 

பண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம்? இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன். 


இன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது? அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது? எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா? 

ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா? 

பொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது. 

டேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐக் உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரணக் கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது. இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர். 

இந்தக் க்ளவுடில் இருக்கும் கம்ப்யூட்டர்கள், "என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்" என்றெல்லாம் வளவள லொடலொட என பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் "இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம். 


கூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால் ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை. Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள். அன்று முதல் ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது. 

காசண்ட்ராவின் அழகிலும் ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா!! கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்!). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன. 

காசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட

மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான்சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா?!!

Tuesday, July 06, 2010

ராவணன் - சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா

ராவணன் - சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா: "

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

விக்ரமுக்கும் ஹரன் பிரசன்னாவுக்கு ஒரே ஒற்றுமை இருவருக்கும் வயதாகிவிட்டது !
நல்ல விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்


"

Sunday, June 06, 2010

உபுன்டு எட்டு அடி - லினக்ஸ் மின்ட் பதினாறு அடி!!

உபுன்டு எட்டு அடி - லினக்ஸ் மின்ட் பதினாறு அடி!!: "








உபுன்டு லினக்ஸை அடிப்படையாகக் (base) கொண்டு பல லினக்ஸ் distributions வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் லினக்ஸ் மின்ட்.



உபுன்டுவே அழகுதான். அந்த அழகுக்கு அழகு செய்தால்? அதுதான் லினக்ஸ் மின்ட்!



உபுன்டுவை இன்னும் மெருகேற்றி லினக்ஸ் மின்டாக கொடுக்கிறார்கள்



லினக்ஸ் மின்டை பயன்படுத்துவது உபுன்டுவை பயன்படுத்துவது போல்தான் இருக்கும்.



டல்லடிக்கும் Brown வண்ண default வால்பேப்பரோடு உபுன்டு வரும்போதே அதை தூக்கிப்போட்டுவிட்டு, கண்கவர் default வால்பேப்பரோடு வந்த லினக்ஸ் மின்ட், லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் மனதில் "பச்சக்" என்று ஒட்டிக்கொண்டது.





லினக்ஸ் மின்ட் = 99% உபுன்டு + 1% எக்ஸ்ட்ரா
லினக்ஸ் மின்ட் = உபுன்டு ++
உபுன்டு வாழைப்பழம் - லினக்ஸ் மின்ட் உரித்த வாழைப்பழம்
உபுன்டு புது பிளாட். லினக்ஸ் மின்ட் fully furnished பிளாட்.
உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.
உபுன்டு அழகான பெண். லினக்ஸ் மின்ட் மேக்கப் போட்ட அழகான பெண்.
சிலருக்கு உபுன்டு அருக்காணி. பலருக்கு லினக்ஸ் மின்ட் அழகுராணி.


லினக்ஸை முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு லினக்ஸை அறிமுகம் செய்யனும்னா, உபுன்டுவுக்கு பதிலா லினக்ஸ் மின்ட் சிடி தரமுடியுமான்னு பாருங்க!


உபுன்டு பயன்படுத்தும்போது, 'குறிப்பிட்ட plug-in இன்ஸ்டால் செய்தால்தான் நீ இந்த பக்கத்தை முழுசா பார்க்க முடியும்'னு வலைப்பக்கங்கள் அவ்வப்போது வெறுப்பேத்தும்.



புதியவர்கள் உபுன்டுவில் இதையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று தெரியாமல் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி முடியை பிய்த்துக்கொண்டு, உபுன்டுவை ஓசியிலே கொடுத்தாகூட வேண்டாம்யான்னு ஓட்டம் எடுப்பார்கள்.







எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால்கூட அதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு தேடி உபுன்டுவில் சேர்ப்பதற்கு சில பல மணி நேரம்கூட ஆகலாம். அதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்குங்க?



அந்த அனுபவம் லினக்ஸ் மின்டில் குறைவு.



ஏனென்றால் Firefox உலவியில் நமக்கு தேவைப்படும் Realplayer, divx, quicktime, shockwave flash, லொட்டு லொசுக்கு, இத்யாதி இத்யாதி add-on-களை எல்லாம் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது. நேரம் மிச்சம்.







டிவிடி, எம்.பி3, இத்யாதி கணினியில் பயன்படுத்த எந்த இயங்குதளமாக இருந்தாலும் மல்டிமீடியா codec சப்போர்ட் தேவை.



சில சட்டசிக்கல்களால் உபுன்டு அதை சேர்த்து தருவதில்லை. ஆனால் அதை எல்லாம் சேர்த்து லினக்ஸ் மின்ட் தருகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துவது சட்ட விரோதமாக இருக்கலாம்.



எதைப்போட்டாலும் play பண்ணும்னு ஒரு டிவிடி ப்ளேயர் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அந்த concept உபுன்டுவை விட லினக்ஸ் மின்டுக்கே பொருந்தும்.


எது எப்படியோ, லினக்ஸ் விரும்பும் புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் ஒரு வரப்பிரசாதம்தான்.


ஆனால் ஒரே ஒரு குறை என்னன்னா, உபுன்டு சிடி வீட்டுக்கு வருவது போல் லினக்ஸ் மின்ட் வராது.


லினக்ஸ் மின்டை டவுன்லோடு செய்ய ... http://www.linuxmint.com/download.php

Courtesy :
"

Saturday, May 29, 2010

சிங்கம் - FIR

சிங்கம் - FIR: "



படம் ஆரம்பித்தவுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்று தடபுடலாக ஆரம்பித்தவுடன். வேட்டைக்காரன், சுறா எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போனது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் சூர்யாவின் 25 படம் என்று போட்டார்கள். கடவுளை வேண்டிக்கொண்டு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.

”சென்னை” என்று காண்பித்துவிட்டு நல்ல வேளை கண்ணகி சிலையும், சென்டரல் ஸ்டேஷனும் காண்பிக்கவில்லை. அதற்காக இயக்குனருக்கு சபாஷ்.

வில்லன் பிரகாஷ்ராஜ் அதே கெட்டப், அதே மேனரிஸம், அதே குங்குமப் பொட்டு. கூட பங் தலையும், ஒத்த டோலாக்கு போட்ட அடியாட்கள். சென்னையை அறிமுகம் செய்து வைக்க சென்டரல் ஸ்டேஷன் பயன் படுத்தாமல் வில்லனை அறிமுகம் செய்து இவை எல்லாம் உபயோகப்படுத்திவிட்டார்.

ஊரில் இருக்கும் தாதாக்கள் எல்லாம் இவர் கட்டுப்பாட்டில் தான் என்று காண்பிக்க முதல் சீன், கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு தாதாவை போட்டு தள்ளி தான் ரொம்ப முரட்டு குணம் படைத்தவன் என்று நமக்கு சொல்ல முதல் சீன். பல சினிமாவில் நாம் பார்த்து பழகிப் போன டாட்டா சூமோ வில்லன் படம் என்று டைரக்டர் நமக்கு முதல் சீனிலேயே உணர வைக்கிறார்.


நல்லூரில் ஆரம்பிக்கிற கதை. நல்லூர் என்று தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பசுமையான கிராமம். வீடுகள், மரங்கள், விவசாயம், ஆடு, மாடுகள், பெரிய ஓட்டை போட்ட காதுகளை உடைய கிழவிகள் என்று எதையும் காண்பிக்காமல் ஒரு வீடு, ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று காண்பித்த இயக்குனருக்கு அடுத்த சபாஷ்.

சூர்யா - அந்த ஓட்டு வீடு போலீஸ் ஸ்டேஷனில் தான் ‘பாரத் சிமிண்ட்ஸ்’ விளம்பரத்தில் தேவர் மகன் மீசையுடன் வரும் அதே சூர்யா எஸ்.ஐயாக வேலை பார்க்கிறார். கோயில் உண்டியலைத் திருடிக்கொண்டு போகும் சில்லரைத் திருடர்களை ஏதோ பெரிய ரவுடி கும்பல் போல துரத்தி துரத்தி துவம்ஸம் செய்கிறார். பெரிய ஹீரோ என்று எப்படி காண்பிக்க வேண்டாமா ? சரி கடைசியில் இதே மாதிரி காட்சிகள் பிரகாஷ் ராஜுடன் இருக்க போகிறது என்று நமக்கு தெரிந்தாலும், நம்மை உட்கார வைத்திருப்பது திரைக்கதையும் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்.

விவேக் - சூர்யா இருக்கும் அதே ஸ்டேஷனில் ஒரு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு அசட்டு ஜோக் அடித்துக்கொண்டு ஏட்டாக இருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினிக்கு பின்னாடி வருகிறார், இங்கே சூர்யாவிற்கு பின்னாடி. “எரிமலை எப்படிப் பொறுக்கும்?” என்ற பொங்கி எழுந்து ஜட்டிக்குள் இருக்கும் பல்பையும், பின்னாடி இருக்கும் எதையோ ஒன்றையும் அடிக்கடி ஃபூஸ் செய்துக்கொள்கிறார். நடிகர் சிவாஜி போல இதுலயும் இமிடேட் செய்தாலும் இந்த முறை சிரிப்பு வரவில்லை. சிவாஜி போலவே அவருக்கு வயசானது காரணமாக இருக்கலாம். இல்லை, பத்மஸ்ரீ வாங்கியதால் வயசாகிவிட்டதா என்று தெரியலை. பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

அனுஷ்கா - வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் சுட்டி ஹீரோயின். இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அடிவாங்குவார். ஆனால் சினிமாவில் இவர் ஹீரோவை லவ் செய்ய வேண்டும், அல்லது ஹீரோ இவளை லைவ் செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இவ்வளவு அழகான அக்கா இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தேவர் மகன் மீசை வைத்திருந்தாலும், சூர்யாவிற்கு இவர் அக்காவாகத் தெரிகிறார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படம் ஃபிரியா நடித்துக்கொடுக்க வேண்டும் என்று ஏதாவது காண்டரக்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. அம்மணி ‘தாராளமா’கவே நடித்து கொடுத்திருக்கிறார். ஒரே ஆச்சரியம் இவர் வரும் சில காட்சிகள் கதை ஓட்டத்துக்கு ஒத்து போகிறது.

வசனம் : பஞ்சை நூலாக்கி, நூலை பெட்ஷீட்டாக்கிவிட்டார். பஞ்ச் மிஸ்ஸிங். இருந்தாலும் சில இடங்களில் நன்றாகவே இருக்கிறது. மசாலாப் படத்துக்கு ஏற்ற வசனங்கள்.

பாடல்கள்: சன் டிவியில் விளம்பரத்தில் வரும் பாடல்கள் மாதிரியே படத்திலும் வருகிறது. சரியான நேரத்துக்கு பாடல்கள் வருவதால் பிழைத்தது. அனுக்‌ஷா அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தவுடன் ”பாட்டை போடுயா சீக்கிரம்” என்று பின் சீட்டிலிருந்து ஒருவர் கத்தினார். தமிழர்களுக்கு தான் எத்தனை ஐ.க்யூ ! கடைசி பாடல் நீல நிறத்தில் வேட்டைக்காரன் செட்டை நினைவு படுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை பிழைத்துக் கொண்டார். பின்னனி இசை சிங்கம் போல உறுமுகிறது.

ஒளிப்பதிவு: மற்ற ஒளிப்பதிவாளர்களை போல தானும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று சில காட்சிகளில் முயன்று இருக்கிறார். பாடல் காட்சிகளில் பரவாயில்லை.

திரைக்கதை: இடைவேளியின் போதே க்ளைமேக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது ஒரு பிளஸ். பிரகாஷ் ராஜ் காய்களை நகர்த்த அதே காய்களை கொண்டு இவர் வில்லனுக்கு ஆப்பு வைக்க பல படங்களில் பார்த்தது தான் என்றாலும் போர் அடிக்காமல் போகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் சூர்யா சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது அங்கே காணும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இப்படி பல காட்சிகள் இருப்பதால் படம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஹரி எந்த சாமியை வேண்டிக்கொண்டு படம் எடுத்தார் என்று தெரியவில்லை ஆனால் பல காட்சிகளில் ‘சாமி’ பாதிப்பு இருக்கிறது.

மற்றவை: மனோரமா, நாசர், ராதாரவி, யுவராணி, போஸ், தியாகு என்று நமக்கு தெரிந்தவர்களையும், அருவாள், கப்படா, பைக், கார், ஹெலிகாப்டர், ரயில், கப்பல்னு மசாலா படத்துக்கு தேவையானவற்றை உபயோகப்படுத்தி கதையை நல்லூரில் ஆரம்பித்து நெல்லூரில் முடித்துவிட்டார் ஹரி.


சிங்கம்: ‘புலி’த்த மாவு தோசை

இட்லிவடை மார்க் : 5.5/10

பிகு: ஹரிக்கு ‘சிங்கம்’ பத்தாவது படமாக வெளிவருகிறது. அடுத்த படமும் இதே மாதிரி எடுத்தால் பத்தோடு பதினொன்று என்று சொல்லிவிடுவார்கள் :-)



"

Saturday, May 01, 2010

FUN

Thursday, April 29, 2010

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?.
========================

அந்த மாணவன் மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த ஆசிரியர், இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா. பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த மாணவன் கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை மாணவன் அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று ஆசிரியர் பதிலளித்தா

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?
=====================

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.

அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.
 
Chammi's Blog - Free Blogger Templates