உபுன்டு லினக்ஸை அடிப்படையாகக் (base) கொண்டு பல லினக்ஸ் distributions வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் லினக்ஸ் மின்ட்.
உபுன்டுவே அழகுதான். அந்த அழகுக்கு அழகு செய்தால்? அதுதான் லினக்ஸ் மின்ட்!
உபுன்டுவை இன்னும் மெருகேற்றி லினக்ஸ் மின்டாக கொடுக்கிறார்கள்
லினக்ஸ் மின்டை பயன்படுத்துவது உபுன்டுவை பயன்படுத்துவது போல்தான் இருக்கும்.
டல்லடிக்கும் Brown வண்ண default வால்பேப்பரோடு உபுன்டு வரும்போதே அதை தூக்கிப்போட்டுவிட்டு, கண்கவர் default வால்பேப்பரோடு வந்த லினக்ஸ் மின்ட், லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் மனதில் "பச்சக்" என்று ஒட்டிக்கொண்டது.
லினக்ஸ் மின்ட் = 99% உபுன்டு + 1% எக்ஸ்ட்ரா
லினக்ஸ் மின்ட் = உபுன்டு ++
உபுன்டு வாழைப்பழம் - லினக்ஸ் மின்ட் உரித்த வாழைப்பழம்
உபுன்டு புது பிளாட். லினக்ஸ் மின்ட் fully furnished பிளாட்.
உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.
உபுன்டு அழகான பெண். லினக்ஸ் மின்ட் மேக்கப் போட்ட அழகான பெண்.
சிலருக்கு உபுன்டு அருக்காணி. பலருக்கு லினக்ஸ் மின்ட் அழகுராணி.
லினக்ஸை முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு லினக்ஸை அறிமுகம் செய்யனும்னா, உபுன்டுவுக்கு பதிலா லினக்ஸ் மின்ட் சிடி தரமுடியுமான்னு பாருங்க!
உபுன்டு பயன்படுத்தும்போது, 'குறிப்பிட்ட plug-in இன்ஸ்டால் செய்தால்தான் நீ இந்த பக்கத்தை முழுசா பார்க்க முடியும்'னு வலைப்பக்கங்கள் அவ்வப்போது வெறுப்பேத்தும்.
புதியவர்கள் உபுன்டுவில் இதையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று தெரியாமல் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி முடியை பிய்த்துக்கொண்டு, உபுன்டுவை ஓசியிலே கொடுத்தாகூட வேண்டாம்யான்னு ஓட்டம் எடுப்பார்கள்.
எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால்கூட அதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு தேடி உபுன்டுவில் சேர்ப்பதற்கு சில பல மணி நேரம்கூட ஆகலாம். அதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்குங்க?
அந்த அனுபவம் லினக்ஸ் மின்டில் குறைவு.
ஏனென்றால் Firefox உலவியில் நமக்கு தேவைப்படும் Realplayer, divx, quicktime, shockwave flash, லொட்டு லொசுக்கு, இத்யாதி இத்யாதி add-on-களை எல்லாம் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது. நேரம் மிச்சம்.
டிவிடி, எம்.பி3, இத்யாதி கணினியில் பயன்படுத்த எந்த இயங்குதளமாக இருந்தாலும் மல்டிமீடியா codec சப்போர்ட் தேவை.
சில சட்டசிக்கல்களால் உபுன்டு அதை சேர்த்து தருவதில்லை. ஆனால் அதை எல்லாம் சேர்த்து லினக்ஸ் மின்ட் தருகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துவது சட்ட விரோதமாக இருக்கலாம்.
எதைப்போட்டாலும் play பண்ணும்னு ஒரு டிவிடி ப்ளேயர் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அந்த concept உபுன்டுவை விட லினக்ஸ் மின்டுக்கே பொருந்தும்.
எதைப்போட்டாலும் play பண்ணும்னு ஒரு டிவிடி ப்ளேயர் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அந்த concept உபுன்டுவை விட லினக்ஸ் மின்டுக்கே பொருந்தும்.
எது எப்படியோ, லினக்ஸ் விரும்பும் புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் ஒரு வரப்பிரசாதம்தான்.
ஆனால் ஒரே ஒரு குறை என்னன்னா, உபுன்டு சிடி வீட்டுக்கு வருவது போல் லினக்ஸ் மின்ட் வராது.
லினக்ஸ் மின்டை டவுன்லோடு செய்ய ... http://www.linuxmint.com/download.php
Courtesy :
No comments:
Post a Comment