Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Wednesday, September 22, 2010

இந்த நாட்டை எது காப்பாற்றும்?

-------எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் 

திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்றுசொல்லிவிட்டு, “ அந்தப் பணத்தை எனக்குக் கொடு” என்று வாங்கிக்கொள்ளும் சீர் திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தன் பதவியில் இருக்கும்போது காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன்அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால்,” ஐயோ! அநியாயம்!”என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தராசைத் தலைகீழாக நிறுக்கும் வணிகர்களை, வியாபாரிகளைப்பார்த்திருக்கிறேன்.

பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறுமாதத்திற்குப் பிறகு”நகை வட்டியில் மூழ்கி விட்டது” என்று சொல்லும்அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியில் கலப்பதற்கென்று தனிக்'கல் தொழிற்சாலை'யே நடத்தும் அரிசிவியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பைவரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆட்டுக் கறியில் மாட்டுக் கறியையும் கலந்து பிரியாணி போடும் அசைவஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குகோழி வாங்கி அதை எண்பது ரூபய்க்கு விற்கின்ற அநியாயத்தைக்கண்டிருக்கிறேன்.

நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும்கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.
அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்றுவிற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோவில்களைக் கண்டேனோஅவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவிமதம், ஒரே துணைக்கருவி இறைவன். அந்த மதமும், இறைவனும்தான் மனிதர்களை மீட்கமுடியும்.
தெய்வபக்தி வளர வளர,”நமக்கேன் வம்பு; ஆண்டவன் நம்மைச்சபித்து விடுவான். ஆண்டவன் நம்மைத்தண்டித்து விடுவான்” என்றெல்லாம் பயந்து பொய் சொல்லாமலே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு

Thursday, August 26, 2010

கண்ணதாசன் மாஸ்டர் பீஸ் கவிதை

Thursday, July 22, 2010

மனதைத் தொட்ட வரிகள் ....

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்
- ஸ்காட்லாந்து பொன்மொழி

2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
- கவியரசு கண்ணதாசன்

3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

4. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்
- நெப்போலியன்

5. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
- ஆஸ்கார் ஒயில்ட்

6. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்
- பெர்னாட்ஷா

7. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
- ஹாபர்ட்.

8. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
- பாலஸ்தீனப் பழமொழி

9. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
- ப்ரெட்ரிக் நீட்சே

10. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
- வின்ஸ்டர் லூயிஸ்

இந்த பத்துப் பொன்மொழிகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது?

எழுதுங்கள்!

 
Chammi's Blog - Free Blogger Templates