தேவனின் புத்தகங்கள் .காலத்தால் அழியாதது .டைம் கிடச்சா வாங்கி படுச்சு பாருங்க .எல்லாமே அந்த காலத்து பொகிஷங்கள்.இவை என்றுமே காலத்தால் அழியாதது .தேவன் நின் இயற் பெயர் R. மகாதேவன். கல்கி, ஆனந்த விகடனில் ஆசிரியராக 23 ஆண்டுகள் பணி புரிந்தார். இவர் 1957 ல் தனது 44 வயதில் காலமானார்.
துபறியும் சாம்பு சிறு சிறு கதைகள் அடங்கிய ஒரு முழு நகைச்சுவை தொகுப்பு. அவருடைய நகைச்சுவை கதைகளில் மிகவும் பிரபலமானவை 'கோமதி இன் காதலன் ' , 'கல்யாணி' , 'மிஸ் ஜானகி' போன்றவை. ' துப்பறியும் சாம்பு வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள் .
உண்மையில் தமிழில் எழுத பட்ட நகைச்சுவை இலக்கியங்கள் அனைத்துமே சாம்புவுக்கு பின்னால் தான் என்று சொல்ல வேண்டும்.
இதில் துபறியும் சாம்பு கதை 10 வருடங்களுக்கு முன்பு Jaya TV யில் நாடகமாக வந்தது.Y.G. மகேந்திரன் சாம்பு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவை அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு ஆகும்.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்றாலும் இன்றைக்குப் படிக்கும் பொழுது அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.
ReplyDelete