Saturday, July 10, 2010

இன்சாட் 4-பி தகவல் சேவை பாதிப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன் என்னோட சன் DTH ல் எந்த ஒரு சேனலும் தெரியவில்லை .சரி மழை பெய்ததன் காரணமாக கூட இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன் .மீண்டும் மழை நின்று வெயில் வந்தவுடன் , எனது TV ஐ போட்டு மீண்டும் முயற்சித்தேன் .No Signal என்றே வந்தது . எனது நண்பருக்கு போன் செய்து கேட்டேன் . அவரும் அதே பதிலே சொன்னாரு ..
சரி என்று இன்டர்நெட் ல் தேடினேன் . அப்போது தான் தெரிந்தது இது 
இன்சாட்-4பி’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் மின்சாரம் விநியோகிக்கும் சோலார் கருவியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பல தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைக்காக இன்சாட்-4பி என்ற செயற்கைக்கோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏரியன்5 என்ற ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் செயல்பாட்டு காலம் 12 ஆண்டுகளாகும்.
பூமியை சுற்றிவரும் இந்த செயற்கைக்கோள் 3 டன்கள் எடை கொண்டது. இதில் 24 கம்யூனிகேஷன் டிரான்ஸ்போன்டர்ஸ்கள் (12 கே.யூ-பேன்டு, 12 சி-பேன்டு ) உள்ளன. இந்நிலையில் இந்த செயற்கைக்கோள் செயல்படத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியைக்கொண்டு தயாரித்து வழங்கும் 2 சோலார் கலத் தகட்டுகளில் ஒன்றில் கடந்த 7-ம் தேதி கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து அந்த செயற்கைக்கோளில் உள்ள டிரான்ஸ்பாண்டர் கெப்பாசிட்டி கருவிகளில் 50 சதவீத இயக்கம் நின்றுபோயுள்ளது. இந்தக் காரணத்தால் நாட்டில் சில தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டு நின்று போயுள்ளது. அதேபோல தொலைபேசி சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோளாறை விரைவில் சரி செய்து தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் தொலைபேசி சேவைகளை மீண்டும் சரிவரச் செய்ய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
இன்சாட் 4-பி தகவல் சேவை யின் மூலம் ஒளி பரப்பப்படும் சேனல் விபரம் இங்கே. 

No comments:

Post a Comment

 
Chammi's Blog - Free Blogger Templates