தன் பதவியில் இருக்கும்போது காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன்அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால்,” ஐயோ! அநியாயம்!”என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தராசைத் தலைகீழாக நிறுக்கும் வணிகர்களை, வியாபாரிகளைப்பார்த்திருக்கிறேன்.
பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறுமாதத்திற்குப் பிறகு”நகை வட்டியில் மூழ்கி விட்டது” என்று சொல்லும்அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியில் கலப்பதற்கென்று தனிக்'கல் தொழிற்சாலை'யே நடத்தும் அரிசிவியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பைவரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆட்டுக் கறியில் மாட்டுக் கறியையும் கலந்து பிரியாணி போடும் அசைவஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குகோழி வாங்கி அதை எண்பது ரூபய்க்கு விற்கின்ற அநியாயத்தைக்கண்டிருக்கிறேன்.
நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும்கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.
அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்றுவிற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோவில்களைக் கண்டேனோஅவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவிமதம், ஒரே துணைக்கருவி இறைவன். அந்த மதமும், இறைவனும்தான் மனிதர்களை மீட்கமுடியும்.
தெய்வபக்தி வளர வளர,”நமக்கேன் வம்பு; ஆண்டவன் நம்மைச்சபித்து விடுவான். ஆண்டவன் நம்மைத்தண்டித்து விடுவான்” என்றெல்லாம் பயந்து பொய் சொல்லாமலே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு